Wednesday, October 25, 2017

thumbnail

விடுகதைக‌ள் 1000



1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?

  சைக்கிள்

2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

    பட்டாசு

3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?

   தராசு

4. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?

     எறும்புக் கூட்டம்

5. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?

   அஞ்சல் பெட்டி

6. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

    தீக்குச்சி

7. தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

  தபால் தலை

8. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

   கடல் அலை

9. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?

   சாமரம்

10. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.

    வெங்காயம்

11. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?

    செல்பேசி
thumbnail

யானைக்கு மொத்தம் 60 பெயர்கள்


யானை



உங்களுக்கு வியாபகவுள்ளதா !

யானைக்கு மொத்தம் எத்தனை பெயர்கள் இருக்கின்றன தெரியுமா? ஒன்று, இரண்டல்ல, மொத்தம் 60 பெயர்கள் உள்ளன. இவை எல்லாமே தூய தமிழ்ப் பெயர்கள்.

# யானை (கரியது)

# வேழம் (வெள்ளை யானை)

# களிறு

# களபம்

# மாதங்கம்

# கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)

# உம்பர்

# உம்பல் (உயர்ந்தது)

# அஞ்சனாவதி

# அரசுவா

# அல்லியன்

# அறுபடை

# ஆம்பல்

# ஆனை

# இபம்

# இரதி

# குஞ்சரம்

# இருள்

# தும்பு

# வல்விலங்கு

# தூங்கல்

# தோல்

# கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)

# எறும்பி

# பெருமா (பெரிய விலங்கு)

# வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது)

# பூட்கை (துளையுள்ள கையை உடையது)

# ஒருத்தல்

# ஓங்கல் (மலைபோ ன்றது)

# நாக

# பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)

# கும்பி

# தும்பி

# நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)

# குஞ்சரம் (திரண்டது)

# கரேணு

# உவா (திரண்டது)

# கரி (கரியது)

# கள்வன் (கரியது)

# கயம்

# சிந்துரம்

# வயமா

# புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)

# தந்தி

# மதாவளம்

# தந்தாவளம்

# கைம்மலை (கையை உடைய மலை போன்றது)

# வழுவை (உருண்டு திரண்டது)

# மந்தமா

# மருண்மா

# மதகயம்

# போதகம்

# விரமலி

# மதோற்கடம் (மதகயத்தின் பெயர்)

# கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்) ஆகியவை ஆண் யானைகளின் பெயர்கள்.

# பிடி

# அதவை

# வடவை

# கரிணி

# அத்தினி ஆகியவை பெண் யனைகளின் பெயர்கள். இரண்டும் சேர்ந்து மொத்தம் 60 பெயர்கள்.


Tuesday, October 24, 2017

thumbnail

பிரபல விஞ்ஞானிகள்

பிரபல விஞ்ஞானிகளும்  அவர்களின் கண்டுபிடிப்புகளும் 




பொதுஅறிவு  வினாவிடை தொகுப்பு  Click  Here 

மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்

எலக்ட்ரான் - J.J.தாம்சன்

மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்

ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி

ஈர்ப்பு விதி - நியூட்டன்

பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங்

கோள்களின் இயக்க விதி - கெப்ளர்

சூரியக் குடும்பம் - கோபர் நிகஸ்

தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்

நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட்

புவிஈர்ப்புவிசை - சர் ஐசக் நியூட்டன்

சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன்

கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்

ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்

செல் - ராபர்ட் ஹூக்

தொலைபேசி - கிரகாம்பெல்

மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ்

ஜெட் விமானம் - ஃபிராங்க்விட்டில்

கண்பார்வையற்றோர்க்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி

தொலைகாட்சி - J. L. பெயர்டு

அம்மை தடுப்பூசி - எட்வர்டு ஜென்னர்

போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்

.டைனமைட் - ஆல்பர்ட் நோபல்

இன்சுலின் - பேண்டிங்

இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்( இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்)

இரத்த ஒட்டம் - வில்லியம் ஹார்லி

குளோரோஃபார்ம் - ஹாரிஸன் சிம்ப்ஸன்

வெறிநாய்க்கடி மருந்து - லூயி பாய்ஸ்டியர்

எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன்

பாக்டீரியா - லீவன் ஹூக்

குவாண்டம் கொள்கை - மாக்ஸ் பிளாங்க்

எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்

புரோட்டான் - ரூதர்போர்டு

நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்

தெர்மா மீட்டர் - ஃபாரன்ஹூட்

ரேடியோ - மார்கோனி

கார் - கார்ல் பென்ஸ்

குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன்

அணுகுண்டு - ஆட்டோஹான்

ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியூரி

ஹெலிகாஃப்டர் - பிராக்கெட்

லாக்ரதம் - ஜான் நேப்பியர்
thumbnail

உ‌யி‌ரின‌ங்களை‌ப் ப‌ற்‌றிய தகவ‌ல்க‌ள்




       ப‌ல்வேறு உ‌யி‌ரின‌ங்க‌ள் ப‌ற்‌றிய ப‌‌ல்வேறு‌த் தகவ‌ல்க‌ள் இ‌ங்கு தர‌ப்ப‌ட்டு‌ள்ளன. உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்த தகவ‌ல்களையு‌ம் இ‌ங்கு அ‌ளி‌க்கலா‌ம் குழ‌ந்தைகளே!


பொதுஅறிவு  வினாவிடை தொகுப்பு  Click  Here 

மின்மினிப் பூச்சியின் முட்டையும் ஒளி வீசும் தன்மை கொண்டது.

பறக்காத பறவை பெங்குவின் கடல் கோழி என்று அழைக்கப்படுகிறது.

பாம்பே டேக் என்பது ஒரு வகை மீனின் பெயராகும்.

கடல் ஆமைக்கு மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

ஆண் குதிரைக்கு 36 பற்கள் உண்டு.

யானையின் தும்பிக்கையில் எலும்பு இல்லை.

மிக நீண்ட ஆயுள் கொண்ட விலங்கு ஆமை. சுமார் 200 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.

கங்காரு இருந்த இடத்திலிருந்து தாண்டும் தூரம் 7 மீட்டர்.

நீர்வாழ் பாலூட்டி இனங்களில் அதிக பற்கள் கொண்டது திமிங்கலம்தான். எவ்வளவு இருக்கும் என்று நினைக்கின்றீர்கள். சுமார் 260 பற்கள்.

விலங்குகளில் அதிக பற்கள் உடையவது நாய்தான். மொத்தமாக 42 பற்கள் இருக்குமாம். அம்மாடியோவ்

மீன்களின் அரசன் என்று அழைக்கப்படுவது சுறா மீன்.

ஒட்டகச்சிவிங்கி நாக்கு ஒன்றரை அடி நீளத்துக்கு மேல் இருக்கும்.

நெருப்புக் கோழியின் கண்கள் அதன் மூளையின் அளவை விடப் பெரியதாக இருக்கும்.
thumbnail

அமேசன் நதி

அமேசன் நதி



   நதிகள் உலகின் உயிர் நாடிகள் என்று போற்­றப்­ப­டு­கின்­றன. உலக இயக்­கத்தின் இயந்­தி­ரங்­க­ளான நதி­களில் அமேசன் நதி உல­கிலே இரண்­டா­வது பெரிய நதி­யாகும். இந்நதி கொண்ட பரப்பு 4000 மைல்கள் அக­ல­மு­டை­யது.



பொதுஅறிவு  வினாவிடை தொகுப்பு  Click  Here 


அமேசன், அந்தீஸ் மலையில் இருந்தும்  இன்னும் சில உயர்நிலப்­ பி­ர­தே­சங்­களில் இருந்தும் பல ஆறு­களை இணைத்துக் கொண்டு தென் அமெ­ரிக்­காவின் கிழக்குப் பகு­தியில் அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­துடன் இணை­கின்­றது.

உல­கிலே பல உப நதி­களின் வடி­மா­னங்­க­ளையும் தாழ் நிலங்­களில் பரப்பிக் கொண்டு ஓடு­வது அமேசன் நதிக்கே உள்ள மற்­று­மொரு சிறப்­பம்­ச­மாகும். 1500ஆம் ஆண்­ட­ளவில் Vicente Yanez Pinzo என்­ப­வரே அமேசன் நதியின் ஆற்று முகத்­தினை கண்­டு­பி­டித்தார்.

1541இல் அமேசன் பிர­தான நதி­யி­னூ­டாக கடலைச் சென்­ற­டைந்­த­துடன், தன் அற்­பு­தப் ­ப­ய­ணத்­தையே அந் நதிக்கும் பெய­ரிட்­டவர் Francisco Orellana ஆவார்.

பிறேசில் நாட்டின் அரை­வா­சியே அமேசன் நதியால் சூழப்­பட்­டுள்­ளது. பிறே­சிலின் முழு சனத்­தொ­கையில் 10 சத­வீ­தத்­தினர் இங்கு வசிக்­கின்­றனர். இதே சனத்­தொகை தன்மை பேரு, ஈக்­கு­வ­டோ­ரிலும் இந் நதி­யினைக் கொண்ட பகு­தி­களில் காணப்­ப­டு­கின்­றன.



அமே­சனைச் சூழ வாழும் பெரும்­பா­லான மக்­களின் போக்­கு­வ­ரத்துப் பய­ணங்­களும் இந்நதி­யி­னூ­டா­கவே காணப்­ப­டு­கின்­றன.

மறு­ம­லர்ச்சிக் காலத்தில் பல செவ்­விந்­தி­யர்­களே இங்கு முதலில் குடி­யே­றி­ய­தாகச் சொல்­லப்­ப­டு­கின்­றது.

இட அமைவு

அமேசன் நதி தென்­ன­மெ­ரிக்­காவின் மேற்கு எல்­லையில் வடக்கு தெற்­காக அமைந்­துள்ள அந்தீஸ் உயர்­மலைத் தொடரில் இருந்து பல உப நதி­க­ளாகப் பிரிந்து, தென் ஆபி­ரிக்­காவின் கிழக்கு எல்­லையில், அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­துடன் இணை­கின்­றது.

கால­நிலை

மத்­திய கோட்டை வெட்டிக் கொண்­டு­செல்லும் வகையில் அமேசன் தாழ்­நிலம் அமைந்­துள்­ளது. இவ்­வி­டத்தில் வித்­தி­யா­ச­மான கால­நிலை நில­வு­கின்­றது. அதா­வது, அயன வலயம் என்­றாலே அதிக வெப்பம் நிலவும் பகு­திதான்.

ஆனால், அமேசன் பகு­தி­யினைப் பொறுத்­த­மட்டில் இம் மத்­திய கோட்டை ஊடறுத்துச் சென்­றாலும், அமேசன் நதி­யி­னதும் அமேசன் வனாந்­த­ரத்­தி­னதும் இயல்பாய் ஈர­லிப்பைப் பெற்றுக் காணப்­ப­டு­கின்­றது. இங்கு வெப்­ப­நிலை சரா­ச­ரி­யாக 4 பாகையிருந்து 78 பாகை வரை நில­வு­கின்­றது.

எனினும், இப்­ப­கு­தியை வெப்ப வலயம் எனக் கரு­தி­விட முடி­யாது. சம தரை­யான பகு­தி­க­ளுக்குள் காடு­களை மிகை­யாகக் கொண்­டி­ருப்­பதால் அதிக ஈரப்­ப­தனைக் கொண்­டுள்­ளது மட்­டு­மன்றி, மேற்குக் கரையில் எல்­நி­னோவின் தாக்­கத்­தையும், வட கிழக்­காக வியா­பாரக் காற்றின் தாக்­கத்­தையும் அனு­ப­விப்­பதால் இங்கு ஈர­லிப்­பிற்குச் சாத­க­மா­கி­யுள்­ளது.

அமேசன் பகு­திகள் ஜன­வரி தொடக்கம் ஜூன் வரையும் மழை மய­மான கால­நிலை நிலவ, அடுத்த ஆறு மாதங்­க­ளிலும் வரட்சித் தன்மை என்று சொல்லும் அள­விற்கு இல்­லா­விட்­டாலும், பெரும்­பாலும் ஈரக்­க­சி­வான தன்­மையில் காணப்­ப­டு­கின் ­றது.

அமேசன் நதியின் நீர் வரம்புப் பரப்­பா­னது கிட்­டத்­தட்ட 3 மில்­லியன் சதுர மைல்­க­ளாகும். அந்தீஸ் மலையின் நடுப்­ப­குதி பேருவின் மத்­தியில் காணப்படுகிறது

இம் மலை உச்­சியில் இருக்கும் பனிப் பாறைகள் வெப்ப காலத்தில் உருகும் போது, பனி­யாறு பேருவில் காணப்­படும் ஏரி­க­ளுக்கு நீரினை வழங்க, மிகுதி நீர் சிறு நதிகள் வழி­யாக பசுபிக் சமுத்­தி­ரத்­திற்குச் செல்­கின்­றது.

இதுபோக பனி­யா­றுகள் சில மலை­களிலி­ருந்து கிழக்­காக ஓடு­கின்ற அமேசன் கிளை நதிகள் ஊடாக நிமி­டத்­துக்கு 42 மில்­லியன் கன அளவில் அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்­துடன் இணை­கின்­றன.

இந்த அளவு, வரு­டத்தில் சில காலங்­க­ளுக்கு மாற்­ற­ம­டை­கின்­றது. பாரிய அளவில் கருமையான வண்டல் படி­வு­களை கொண்டு செல்லும் போது நதி இரு மருங்­கிலும் படி­ய­வி­டு­வ­துடன், அமேசன் கழி­முகம் அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் கலக்கும் கரை­க­ளிலும் 50 மைல் உய­ரத்­திற்கு இவ் வண்டல் படி­வுகள் படி­கின்­றன.

பொது­வாக வரு­டத்­திற்கு ஓரிரு முறை­களே அமேசன் நதிக்கு வெள்ள அபாயம் நில­வு­வ­தாகச் சொல்­லப்­ப­டு­கின்­றது. ஆகஸ்ட், – செப்­டம்பர் மாதங்­களில் அந்­தீ­ஸி­லி­ருந்து பனி உருகி வழிய, நவம்பர் வரை அமே­சனில் நீர் மட்டம் உயர்­கி­றது. ஜன­வரி – மே மாதங்­களில் வெப்பக் கால­நி­லையின் செல்­வாக்­கினால் நீர் மட்டம் குறைய ஏது­வா­கின்­றது

காடு

மானிட அமை­வி­டங்­களில் பயிர் நட­வ­டிக்­கை­க­ளுக்குச் சாத­க­மான கால­நிலை என்­பது சற்றுக் குறை­வாகக் காணப்­ப­டு­கி­றது. அதிக ஈரப்­பதன் மட்டும் பயிர் நட­வ­டிக்­கை­களை தீர்­மா­னிக்கவல்­லன அல்ல. இவற்­றோடு வெப்பமும், வரட்­சியும் ஒத்­து­ழைக்க வேண்டும்.

அமேசன் நதி­யினை ஆக்­கி­ர­மித்­தி­ருப்­பதே அமேசன் காட்டுப் பகு­திகள்தான். எனவே, இங்கு பயிர் நட­வ­டிக்­கை­களைத் தவிர காடு­படு தொழில்­களே சிறப்­புற்று விளங்­கு­கின்­றன.

உல­கிலே அதிக ஈர­லிப்­பினைக் கொண்­டது அமேசன் காடு­க­ளாகும். மட்­டு­மன்றி, உலக காட்டு நிலப்­ப­ரப்­பிலும் அமேசன் காடே முதன்மை வகிக்­கின்­றது. நிலத்­தினுள் பல மீட்­டர்­க­ளுக்கு வேரினை ஊட­றுத்துச் செல்லும் மரங்கள் காணப்­ப­டு­கின்­றன.

இம் மரங்கள் அதிக தடிப்­பா­ன­வை­யா­கவும் அதிக வைர­மா­ன­வை­யா­கவும் விளங்­கு­கின்­றன. அயன வல­யத்தில் அமைந்­துள்ள அமேசன் காட்டு மரங்­களின் கிளைகள் வியா­பித்தும், இலைகள் தட்­டை­யாக அகன்றும் காணப்­ப­டு­வதால் சூரியன் தன் ஒளி­யினை நிலத்­தினில் பரப்ப படா­த­பாடு படு­கின்­றது.

இவை தனக்குத் தேவை­யான சூரிய ஒளி­யினை பெற்றுக் கொள்­ள­வேண்டி ஒன்­றி­லொன்று முட்­டி­மோ­திக்­கொண்டு வளர்­வதால் இம் மரங்­களின் உயரம் 50 மீட்­டர்­க­ளையும் தாண்டி வளர்­கின்­றன.

இவ்­வாறு ஒன்­றி­லொன்று போட்­டி போட்டுக் கொண்டு வளரும் மரங்­களில் றப்பர் மரங்கள் முக்­கியம் பெறு­கின்­றன. றப்பர் மரத்தின் பிறப்­பிடம் அமேசன் காடுகள் என்றும் சொல்­லப்­ப­டு­கின்­றது.

20ஆம் நூற்றாண்டில் முதல் பத்து வரு­டங்கள் உல­கிலே அநே­க­மான நாடு­க­ளுக்கு றப்­ப­ரினை இவ் அமேசன் காடு­களே வழங்­கி­ய­தாகச் சொல்­லப்­ப­டு­கி­றது. 1910ஆம் ஆண்டில் தென் கிழக்கு ஆசிய நாடுகள் இங்­கி­ருந்தே றப்பர் மர வள­ர்ப்­பினை தன் தேசங்­க­ளுக்கும் அறி­மு­கப்­ப­டுத்­தின.

இவை­போ­லவே இன்னும் பல வைர மரங்­களும் இங்கு வளர்­வ­துடன், அவற்றில் பிணைந்துக் கொண்டே ஏறு­கொடி வகை­களும் வளர்­கின்­றன.

உல­கிலே அதி நஞ்சு வாய்ந்த மலைப் பாம்­பி­னங்கள், குரங்கு வகைகள், முதலை, உடும்பு, வண்­ணாத்துப் பூச்­சி­யி­னங்கள், டரன்­டுலா, டொமன்ஞர் போன்ற ராட்­சத சிலந்தி வகைகள் இன்னும் ஈர­லிப்பில் வளரக்கூடிய சதை நத்தை, அட்டை, தவளை, தேரை. போன்ற விலங்­கி­னங்­களும் மெகோவ் ராஜக் கிளி­களும் சிறப்­பாக இங்கு வசித்து வரு­கின்­றன.

தொடர்­பாடல்

இவ் வலயத்தில் நெடுஞ்சாலைகளோ தண்டவாளப் பாதைகளோ இல்லை. சாதாரணமாக வான் வழியாகவும் பெரும்பாலும் நதி வழியாகவும்தான் போக்குவரத்துக்கள் இடம்பெறுகின்றன. பெரிய அளவில் முக்கியம் வாய்ந்த வான் பயணங்கள் அமேசன் காடுகளின் மேலாகச் செல்வது அரிதாகும்.

நதிவழியாகவும் சாதாரண படகுகளையும் கப்பல்களைக் கொண்டுமே நடைபெறுகின்றன. இந் நதி வழிப் போக்குவரத்தை ஆபத்தாக்கும் வகையில் நதிகளின் சில இடங்களும் ஆபத்தாகவே உள்ளன. இதனால் இன்றிய மையாத கப்பல் போக்குவரத்துச் சேவை கள் மாத்திரம் நடைபெறுவதுடன், அந்நதி, காட்டினைப் பற்றி நன்கறிந்தவர்களே அப் பிரதேசத்தில் தங்கள் ஜீவனோபாயத்தை செய்வது வழக்கம்.


தென் அமெ­ரிக்­காவின் வட பாகத்தில் வியா­பித்துக் காணப்­படும் சம­வெ­ளியில் அமேசன் ஈர­நிலக் காடு­களால் அதி­க­மாக சூழப்­பட்­டுள்­ளது. அந்தீஸ் மலையைத் தவிர ஏனைய இடங்­களில் மேட்டு நிலத்­தி­னையும் பெரும்­பா­லான சம­வெ­ளி­களைக் கொண்டே அமேசன் நதி பாய்ந்­தோ­டு­கின்­றது.

About