thumbnail

விடுகதைக‌ள்

விடுகதைக‌ள்



1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?

  சைக்கிள்

2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

    பட்டாசு

3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?

   தராசு

4. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?

     எறும்புக் கூட்டம்

5. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?

   அஞ்சல் பெட்டி

6. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

    தீக்குச்சி

7. தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

  தபால் தலை

8. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

   கடல் அலை

9. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?

   சாமரம்

10. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.

    வெங்காயம்

11. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?

    செல்பேசி

No Comments

About